×

இறந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு ரூ.86.5 லட்சம் நிதியுதவி!

தென் மண்டல காவலர்கள் சார்பில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில் ரவுடி துரைமுத்து பிடிக்க சென்ற போலீசார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என
 

தென் மண்டல காவலர்கள் சார்பில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில் ரவுடி துரைமுத்து பிடிக்க சென்ற போலீசார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் தென் மண்டல காவலர்கள் சார்பில் 86.5 லட்சம் ரூபாய் இறந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. காவலர் சுப்பிரமணியன் இல்லத்தில் தென்மண்டல ஐ.ஜி.முருகன் நேரில் சென்று ஆறுதல் வழங்கியதோடு நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.