×

ரேஷன் கார்டு இருந்தால் போதும்…ரூ.50,000 கடன் கொடுக்கப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதனிடையே நாளையோடு 4 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டு இருந்தால்
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதனிடையே நாளையோடு 4 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவி அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரை மாடக்குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், கூட்டுறவு வங்கிகளில் முதல்வர் உத்தரவின் படி கடன் பெறுவது சுலபமாக்கப்பட்டுள்தாக தெரிவித்தார்.