×

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்!

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.5 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த தனியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ரூபாய் 5 கோடி ரூபாய் ரொக்கமும், 150 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள், பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி குழுமத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 150 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
 

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.5 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஈரோட்டை சேர்ந்த தனியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ரூபாய் 5 கோடி ரூபாய் ரொக்கமும், 150 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள், பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி குழுமத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 150 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்வி கட்டணம் ரூபாய் ரூ.150 கோடி கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவை தி.மு.க மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.