×

‘சாத்தான்குளம் விவகாரம்’.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்
 

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆசன வாயிலில் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக இணையதளத்தில் பரபரப்பான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வரும் மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள், அவர்களின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளனர். முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சத்தை திமுக எம்.பி கனிமொழி அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.