×

உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி – வழங்கினார் அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில்உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று அவர்களது உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் உடல்களை பெற்றுக் கொள்ள
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில்உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று அவர்களது உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் உடல்களை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே உயிரிழந்த ஜெயராஜின் மனைவி உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவரது மகள் இருவரின் உடல்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் நேற்று மாலை அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் உள்ள உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் பணத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கியுள்ளார். முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.