×

விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா ஒரு புறம் மக்களை தாக்கிக் கொண்டிருக்க மறுபுறம் பலர் விபத்திலும் காவலர்கள் தாக்குதலிலும் உயிரிழக்கின்றனர். பல சம்பவங்கள் அவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
 
இந்த நிலையில் விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த 31 குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர், 31 குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.