×

ரவுடி என்கவுன்டர் :ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி சம்மன்!

சென்னை அயனாவரத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் முதல்நிலை காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடியை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதையடுத்து ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சென்னை போலீசாரின் பரிந்துரையை
 

சென்னை அயனாவரத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் முதல்நிலை காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடியை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

இதையடுத்து ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சென்னை போலீசாரின் பரிந்துரையை ஏற்று வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதனால் விசாரணையை நேற்றுமுதல் தொடங்கிய சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இந்நிலையில் சென்னை ரவுடி சங்கரை என்கவுன்டர் செய்த காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. ரவுடியால் வெட்டப்பட்டதாக சொல்லும் காவலர் முபாரக், எஸ்ஐ யுவராஜ், ஆய்வாளர் நடராஜன், கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 7 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 7ஆம் தேதி எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.