×

எகிறும் பொருளாதாரம் – எடப்பாடி ஆட்சியில் சாதிக்கும் தமிழகம்

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு என ஒரு பழமொழி உண்டு அல்லவா! அதேபோலத்தான் இருக்கிறது…திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளும்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிப் போய்விட்டதாக எதிர்க் கட்சிகள் நாள் தவறாமல் கூச்சலிடுகின்றன. இட்டுக்கட்டிய பொய் பிரச்சாரத்தில் போலியான புள்ளி விபரங்களையும் அள்ளி இறைக்கின்றன.ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் தேசிய சராசரியை விட அதிகமான வளர்ச்சி வீதத்தைக் கொண்டிருக்கிறது
 

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு என ஒரு பழமொழி உண்டு அல்லவா! அதேபோலத்தான் இருக்கிறது…திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிப் போய்விட்டதாக எதிர்க் கட்சிகள் நாள் தவறாமல் கூச்சலிடுகின்றன. இட்டுக்கட்டிய பொய் பிரச்சாரத்தில் போலியான புள்ளி விபரங்களையும் அள்ளி இறைக்கின்றன.
ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது.


கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் தேசிய சராசரியை விட அதிகமான வளர்ச்சி வீதத்தைக் கொண்டிருக்கிறது தமிழகம். கொரோனா பேரிடரால் உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும் சூழலில், இந்திய அளவில் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக பொருளாதார மேம்பாட்டை எட்டி சாதனை படைத்திருக்கிறது தமிழகம்.
ஆம்! 2019-20 ஆம் நிதியாண்டில் தேசிய சராசரி விகிதத்தை விட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. தேசிய வளர்ச்சி விகிதம் 4.2 ஆக இருக்கும் அதே சமயத்தில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 8.03 ஆக உள்ளது. கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி.


இது போலவே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பட்டியலில் 12வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளிவிட்டு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது தமிழகம்.
கொரோனா பேரிடர் சமயத்திலும் தமிழகம் இதை சாதித்திருப்பதற்கு ஆட்சியாளர்களும், அவர்கள் கடைபிடித்துவரும் தெளிவான, ஒளிவுமறைவற்ற தொழிற் கொள்கைகளுமே காரணம் என பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
எடப்பாடி அரசின் சாதனை மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கக் கல்லாகக் கடந்த காலாண்டில் இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம். இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 236 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழகம் பெற்றிருக்கிறது.


இப்படி எல்லா துறைகளிலும் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சித்திறன் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் தொழில் துறையினர்.
’’கூர்ந்த மதிநுட்பம், விரைந்து முடிவெடுக்கும் திறன், அதிகார மட்டத்துடன் அனுசரணையான போக்கு, வெளிப்படையான நடவடிக்கைகள் என முதல்வர் எடப்பாடியின் சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அரசு நிர்வாகத்தில் அவருக்கு இருக்கும் நீண்ட அனுபவம் கூடுதல் பலம். இப்படிப்பட்ட நல்ல சூழல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் இன்னும் உச்சங்களைத் தொடுவது நிச்சயம்’’ என்கிறார்கள் இவர்கள்.