×

ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்…எப்படி தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 33,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,63,129 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பால் நேற்று 335 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,005 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அல்லல்பட்டு வந்தனர். நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்றும் மருந்து கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் வீடு
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 33,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,63,129 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பால் நேற்று 335 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,005 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அல்லல்பட்டு வந்தனர். நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்றும் மருந்து கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வந்தனர். இதனால் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 6 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இன்று முதல் (மே 18)அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகள்மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் ரெம்டெசிவர் மருந்து தேவை குறித்த கோரிக்கைகளுடன் இணையத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மூலமாகவே வாங்க இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம்.