×

தளர்வுகளற்ற ஊரடங்கு : தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தின் கொரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்தை கடந்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த 10ஆம் தேதி முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் சுற்றித் திரிந்ததால், கொரோனா பரவல் வேகமெடுக்க ஆரம்பித்தது. இதனால் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்தால் மட்டுமே கொரோனா கட்டுக்குள்
 

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்தை கடந்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த 10ஆம் தேதி முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் சுற்றித் திரிந்ததால், கொரோனா பரவல் வேகமெடுக்க ஆரம்பித்தது. இதனால் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்தால் மட்டுமே கொரோனா கட்டுக்குள் வரும் என மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நிலையில் , இன்று முதல் தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அதேசமயம் மருந்தகங்கள் ,பால் விற்பனை, தினசரி பத்திரிக்கை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தடை இன்றி இயங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் மக்களுக்கு தேவையான காய்கறி ,பழங்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் அரசு சார்பில் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.