×

சூறைக்காற்றுடன் அதீத கனமழைக்கு வாய்ப்பு… தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசியில் கனமழை
 

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வாய்ப்பு இருப்பதால் அரபிக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், நாளை மறுநாள் தமிழகத்தின் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. நாளை மறுநாள் அதாவது 14ஆம் தேதியன்று தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து புயலாக மாறினால் TAUKTEA என பெயரிட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.