×

விநாயகர் சிலைகள் – ஆற்றில் கரைப்பதன் அறிவியல் பின்னணி !

பண்டிகை முதல் பாரம்பரிய நடைமுறைகள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் பல அறிவியல் உண்மைகளை மறைத்து முன்னோர்கள் சொல்லிவைத்து சென்றுள்ளனர். இதில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் ஒன்று. விநாயகர் பண்டிகைக்குப் பிறகு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆடிப்பெருக்கில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது ஆற்றில் உள்ள மணல்களை வெள்ளமானது கரைத்துக் கொண்டு சென்றுவிடும். இதனால் நீர் நிலத்தில் இறங்காமல் கடலில் வீணாக கலந்துவிடும். ஆனால் களிமண் இருந்தால் நீர் பூமியின் கீழே
 

பண்டிகை முதல் பாரம்பரிய நடைமுறைகள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் பல அறிவியல் உண்மைகளை மறைத்து முன்னோர்கள் சொல்லிவைத்து சென்றுள்ளனர். இதில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் ஒன்று. விநாயகர் பண்டிகைக்குப் பிறகு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

ஆடிப்பெருக்கில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது ஆற்றில் உள்ள மணல்களை வெள்ளமானது கரைத்துக் கொண்டு சென்றுவிடும். இதனால் நீர் நிலத்தில் இறங்காமல் கடலில் வீணாக கலந்துவிடும். ஆனால் களிமண் இருந்தால் நீர் பூமியின் கீழே இறங்கிவிடும். இதை மனதில் வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் விநாயகர் சிலைகளை செய்து அவற்றை முன்னோர்கள் ஆற்றில் கரைக்க செய்தனர்.

விநாயகர் பண்டிகை முடிந்து 3 முதல் 5 நாட்கள் கழிந்த பிறகு விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கும் கூட ஒரு சூட்சமத்தை முன்னோர்கள் வைத்தனர். ஈர களிமண் விரைவாக கரைந்து நீரின் வேகத்தில் சென்றுவிடும் என்பதால் காய்ந்த களிமண்ணை (சிலையை) கரைக்க செய்தனர். இதன் மூலம் அந்தக் களிமண் ஆனது அதே இடத்தில் படிந்து ஆற்று நீர் நிலத்தடி நீராக மாறி குடிநீர் பிரச்சனையை போக்கும் என்பதே அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரகசியம். ஆனால் காலப்போக்கில் இந்த உண்மை புரியாமல் கலர்கலராய் பெயிண்ட் அடித்த விநாயகர் சிலைகளை கடலிலேயே கரைத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்த தொடங்கிவிட்டார்கள். மேலும் வண்ணச் சாயங்கள் பூசி ஆற்றில் கரைக்கப்படும் சிலைகளால் நீர் மாசுபடுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.