×

20 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்ற ராமநாதபுரம் மீனவர்கள்!

நாமநாதபுரம் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து புயல் உருவாகி மக்களை நிலைகுலைய வைக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் 21ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிவர் புயலாக உருப்பெற்றது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. குறிப்பாக கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த
 

நாமநாதபுரம் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது.

வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து புயல் உருவாகி மக்களை நிலைகுலைய வைக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் 21ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிவர் புயலாக உருப்பெற்றது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. குறிப்பாக கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த கனமழையால் மக்கள் தங்களை இயல்பு வாழ்க்கையை இழந்தனர். தமிழகத்தில் நிவர் புயலால் பெருமளவு சேதம் ஏற்பட வில்லை. அதேசமயம் 3 பேர் பலியாகினர். புதுச்சேரியில் சுமார் 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே புரெவி என்ற புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவான நிலையில் சிதம்பரம் ,புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர் மாவட்டம் கடல் போல் காட்சி அளிக்கத் தொடங்கியது. பிரசித்தி பெற்ற கோவில்களியெல்லாம் வெள்ள நீர் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் மழை ஓய்ந்த நிலையில் சூரியன் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் புயல் அச்சுறுத்தல் நீங்கியதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 20 நாட்களுக்குப் பின் கடலுக்கு சென்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.