×

‘ஆட்சி மாற்றம்..இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை’..வைரலாகும் ரஜினியின் அரசியல் போஸ்டர்கள்!

இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை இல்லை என ரஜினி ரசிகர்கள் மதுரை மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினி ரசிகர்கள் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கமல்ஹாசனும் ரஜினியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. அதற்கு ஆமோதித்த கமல்ஹாசன், தேர்தல் நேரத்தில் எல்லா விவரங்களும் அறிவிக்கப்படும் என கூறினார். இதனிடையே ரஜினி நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தகவல்கள்
 

இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை இல்லை என ரஜினி ரசிகர்கள் மதுரை மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினி ரசிகர்கள் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கமல்ஹாசனும் ரஜினியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. அதற்கு ஆமோதித்த கமல்ஹாசன், தேர்தல் நேரத்தில் எல்லா விவரங்களும் அறிவிக்கப்படும் என கூறினார். இதனிடையே ரஜினி நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதே போல, நவம்பர் மாதம் நல்ல செய்தி வரப்போகிறது என நடிகர் ராகவா லாரன்ஸும் தெரிவித்திருக்கிறார்.

இப்படி பல தகவல்கள் வெளியாகும் வரும் நிலையில், அண்ணாத்த படத்தின் படபிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். அதனால் ரஜினி கட்சி ஆரம்பித்ததை கவனிப்பாரா? அல்லது படப்பிடிப்புக்கு செல்வாரா என கேள்வி எழுந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ரஜினி ரசிகர் மன்றங்களோ, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரஜினி அரசியல் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலும் மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் ரஜினியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், ‘அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்! இப்ப இல்லன்னா இனிமே எப்பவுமே இல்லை’ என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.