×

“வா தலைவா வா, இப்போ இல்லனா எப்போ ” சென்னையில் ரஜினி ரசிகர்கள் போராட்டம்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வா தலைவா வா, இப்போ இல்லனா எப்போ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினி கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். தனது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று அறிவித்த ரஜினி, அதன் பிறகு மூன்று ஆண்டுகள் அமைதி காத்தார். இதையடுத்து மீண்டும் கடந்த மாதம் இறுதியில் தான் அரசியலுக்கு வர
 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வா தலைவா வா, இப்போ இல்லனா எப்போ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினி கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். தனது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று அறிவித்த ரஜினி, அதன் பிறகு மூன்று ஆண்டுகள் அமைதி காத்தார். இதையடுத்து மீண்டும் கடந்த மாதம் இறுதியில் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

ரஜினி அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் அவர் பாஜகவின் அழுத்தத்தினால் மட்டும் தான் அரசியலுக்கு வர முனைப்பு காட்டுகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த சூழலில் உடல்நிலை சரியில்லாமல் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் உடல் நலம் தான் முக்கியம் அவர் தொடர்ந்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தால் மட்டுமே போதும் என்று ரசிகர்கள் சிலர் எண்ணிய நிலையில் அவர் கட்டாயம் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று சிலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி, சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். காவல்துறை அனுமதியுடன் நடந்து வரும் இந்த அறவழி போராட்டத்தில் “வா தலைவா வா, இப்போ இல்லனா எப்போ ” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.