×

புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்- முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசு உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் கோயில், மசூதி, தேவாலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவகங்களில் சமூக இடைவெளியுடன் சாப்பிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசின் முதல்கட்ட தளர்வான ஜூன் 8 ஆம் தேதி
 

மத்திய அரசு உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் கோயில், மசூதி, தேவாலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவகங்களில் சமூக இடைவெளியுடன் சாப்பிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசின் முதல்கட்ட தளர்வான ஜூன் 8 ஆம் தேதி முதல் மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநில வழியாக தமிழக பேருந்துகள் இயக்குவது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்