×

“தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்”… உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் 75 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். சென்னையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால்
 

சென்னை

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் 75 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

சென்னையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிகை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் மூலம் சேர்க்கை நடைபெறுவதாக தெரிவித்தார். சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிய அமைச்சர் பொன்முடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,210 இடங்கள் உள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்கு 52 இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 11ஆம் வகுப்பு சேர்வதற்கு என்ன தகுதியோ, அதே தகுதி தான் பலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கும் என்றும் விளக்கம் அளித்தார். மேலும், சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்பதால், அதன் பிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் குறிப்பிட்டார்.