×

சிறைக் கைதி செல்வமுருகன் மரணம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த செல்வா முருகன் என்பவர் திருட்டு வழக்கில் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த 30 ஆம் தேதி உடல்நல குறைவால் இறந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த அவரது உறவினர்கள் செல்வமுருகன், கடந்த 28ஆம் தேதி கைதாகி இரண்டு நாட்கள் சித்திரவதைக்கு பின்னர் 30 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
 

சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த செல்வா முருகன் என்பவர் திருட்டு வழக்கில் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த 30 ஆம் தேதி உடல்நல குறைவால் இறந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த அவரது உறவினர்கள் செல்வமுருகன், கடந்த 28ஆம் தேதி கைதாகி இரண்டு நாட்கள் சித்திரவதைக்கு பின்னர் 30 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர். அத்துடன் முந்திரி வியாபாரம் செய்யும் அவர் பொய் வழக்கில் கைதாகிய நிலையில் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து விருத்தாசலம் கிளை சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி நேற்று வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் விருத்தாசலம் சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி .நெய்வேலி காவல் நிலையத்துக்கு சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கின. காவல் ஆய்வாளர், காவலர்கள் என பலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.