×

கேப்டன் 100 வயது வரை நன்றாக இருப்பார்; கிளைமாக்ஸிற்கு வருவார்- பிரேமலதா விஜயகாந்த்

திருப்பூரில் மாற்றுக்கட்சியினர் தேமுதிகவில் இணையும் விழா பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் 100 வயது வரை நன்றாக இருப்பார். நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வருவார், பிரச்சாரம் மேற்கொள்வார். அதிமுக கட்சியின் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார், பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக்
 

திருப்பூரில் மாற்றுக்கட்சியினர் தேமுதிகவில் இணையும் விழா பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் 100 வயது வரை நன்றாக இருப்பார். நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வருவார், பிரச்சாரம் மேற்கொள்வார். அதிமுக கட்சியின் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார், பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறி இருக்கக் கூடிய சூழ்நிலையில் நாங்களும் அவர்களது அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு அறிவிக்கப்படும். தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணிதான் ஆட்சியமைக்கும். 2011 ல் அதிமுகவோடு கூட்டணி அமைத்தோம் , இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது . மத்தியில் பாஜக வோடு கூட்டணி அமைத்தோம் 2 வது முறையாக பாஜக ஆட்சியே தொடர்கிறது.

உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. நிறைய சாதிக்க வேண்டிய உள்ள சூழ்நிலையில் அவப்பெயரை பெற்று விடக்கூடாது. பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் போராடும் உரிமையை பறிக்க கூடாது” எனக் கூறினார்.