×

T20 உலக கோப்பை போட்டிகள் ஒத்தி வைப்பு

இந்தியாவில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான். அந்தளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஆட்டம் கிரிக்கெட். 5 நாள்கள் ஆடும் டெஸ்ட் கிரிக்கெட் போரடிக்க ஆரம்பித்த காலத்தில் உருவாக்கப்பட்டது 20 ஓவர்களைக் கொண்ட T20 போட்டிகள். மிகக் குறைந்த காலத்தில் இந்தப் போட்டிகள் பெருவாரியான ரசிகர்களை ஈர்த்துவிட்டது. அதற்கு காரணம் அதன் பரபரப்புதான். 50 ஓவர் மேட்சின் கடைசி 20 ஓவர்களைப் பார்க்கும் விறுவிறுப்பே இப்போட்டிகளை ரசிக்க வைத்தது. 2007 ஆம் ஆண்டில் T20 உலககோப்பை நடைபெற்றது, முதல் உலககோப்பையை தட்டி
 

இந்தியாவில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான். அந்தளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஆட்டம் கிரிக்கெட்.

5 நாள்கள் ஆடும் டெஸ்ட் கிரிக்கெட் போரடிக்க ஆரம்பித்த காலத்தில் உருவாக்கப்பட்டது 20 ஓவர்களைக் கொண்ட T20 போட்டிகள். மிகக் குறைந்த காலத்தில் இந்தப் போட்டிகள் பெருவாரியான ரசிகர்களை ஈர்த்துவிட்டது. அதற்கு காரணம் அதன் பரபரப்புதான். 50 ஓவர் மேட்சின் கடைசி 20 ஓவர்களைப் பார்க்கும் விறுவிறுப்பே இப்போட்டிகளை ரசிக்க வைத்தது.

2007 ஆம் ஆண்டில்  T20 உலககோப்பை நடைபெற்றது, முதல் உலககோப்பையை தட்டி வந்த பெருமை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணிக்குத்தான் சேரும். அதுவும் எதிர் அணி பாகிஸ்தான் எனும்போது பரபரப்புக்கு பஞ்சமா என்ன? கவுதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். ஆனால் மற்றவர்களின் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவைத் தவிர மற்றவர்கள் சொல்லும்படியாக ஆட வில்லை. 20 ஓவர் முடிவில் 157 என ஸ்கோர் இருந்தது. ஆனால், பாகிஸ்தான்  19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களே எடுத்து தோல்வியைத் தழுவியது.

அப்போது ஆரம்பித்த விறுப்பான  T20 உலககோப்பை இந்த ஆண்டு நடைபெற வேண்டியது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் இடைப்பட்ட மாதங்களில் நடக்கும். இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.