×

அருந்ததியர் சமூக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த அரசியல் அங்கீகாரம்!

அருந்ததியர் சமுக தலைவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அச்சமூகத்தின் நன்றி தெரிவித்துள்ளனர். 16-1-2019 அன்று சேலத்தில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் அமைக்க கோரி மனு கொடுத்தார். 29-7-2019 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை ஆதித்தமிழர் மக்கள் கட்சி நிறுவனதலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் அருந்ததியர் இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து அதிமுக
 

அருந்ததியர் சமுக தலைவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அச்சமூகத்தின் நன்றி தெரிவித்துள்ளனர்.

16-1-2019 அன்று சேலத்தில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் அமைக்க கோரி மனு கொடுத்தார்.

29-7-2019 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை ஆதித்தமிழர் மக்கள் கட்சி நிறுவனதலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் அருந்ததியர் இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக அருந்ததியர் சமூகத்தை சார்ந்த மேட்டூர் சந்திரசேகரன் அவர்களை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தும் கோரிக்கை மனு கொடுத்தார்கள்.


7-9-2020 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் மற்றும் ஆதித்தமிழர் மக்கள்கட்சி நிறுவனதலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் அருந்ததியர் இயக்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்தவழக்கறிஞர் நியமனம் செய்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சட்ட போராட்டம் நடத்தி வெற்றி வாகை சூடிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டுமென மனு கொடுத்தார்கள்.

தொடர்ந்து மூன்று முறையும் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரிய போது தலைவர்கள் எஸ்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் ஈரோடு வடிவேல் ராமன் ஆகியோருக்கு உடனடியாக அனுமதி அளித்தார். அது மட்டுமல்ல தலைமை செயலகத்தில் முக்கிய விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் ராஜ மரியாதையுடன் அமைச்சரவை கூட்டம் நடக்கும் அறையில் அமர வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல்வரை சந்தித்த பின் தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்த அருந்ததியர் சமுக தலைவர்கள் எஸ்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் ஈரோடு வடிவேல் ராமன் ஆகிய இருவர் மட்டும் தான் என பெருமைப்பட வேண்டும்.
அருந்ததியர் சமூகத்திற்கு ஜெயலலிதா அறிவித்த அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு 6 சதவீதமாக உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் கட்ட அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அருந்ததியர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.