×

கொரோனா பாதிப்பால் உதவி ஆய்வாளர் மரணம்!

சென்னையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த காவலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (57). இவரது மனைவி நிர்மலா. இவரது மகன் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். தலைமை செயலக உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 7ம் தேதி
 

சென்னையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த காவலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (57). இவரது மனைவி நிர்மலா. இவரது மகன் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். தலைமை செயலக உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 7ம் தேதி பாபுவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர் கொரோனாவில் இருந்து மீண்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல, 2 முறை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையிலும் நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும், நுரையீரல் பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பாபு அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை உதவி ஆய்வாளர் பாபு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் வேலூர் மாவட்டம், புதூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.