×

ரயில் மீது கற்களை வீசிய பாமகவினர் : “ஆயுள் தண்டனை” வரை கிடைக்க வாய்ப்பு : என்ன சொல்கிறது இந்திய இரயில்வே சட்டம்!

பாமக போராட்டத்தின் போது ரயில் மீது கல்லெறிந்தவர்கள் மீது ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி பாமக கட்சி மற்றும் வன்னியர் சங்கம் அறவழிப் போராட்டத்தை நடத்த முடிவு எடுத்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் எதிரே போராட்டம் நடத்த முடிவெடுத்த நிலையில் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை
 

பாமக போராட்டத்தின் போது ரயில் மீது கல்லெறிந்தவர்கள் மீது ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி பாமக கட்சி மற்றும் வன்னியர் சங்கம் அறவழிப் போராட்டத்தை நடத்த முடிவு எடுத்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் எதிரே போராட்டம் நடத்த முடிவெடுத்த நிலையில் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர் . இதனால் அங்கு பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். அத்துடன் அவ்வழியே வந்த ரயிலை நிறுத்திய அவர்கள் ரயில் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக இந்திய இரயில்வே சட்டம் 1989 பிரிவு 150(2)(a)ன் படி இரயில் மீது கல்லெறிகிறவர்களுக்கு பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும். அத்துடன் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எந்த ஒரு அரசு வேலையும் கிடைக்காது. அத்துடன் இதற்கான வழக்கை மத்திய அரசு தான் விசாரணைக்கு எடுத்து கொள்ளும். மத்திய அரசின் கையில் இருக்கும் வழக்கு என்பதால் எளிதில் தள்ளுபடி செய்யப்படாது. எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதற்கான பின் விளைவுகளை யோசித்து களமிறங்கினால் நல்லது என்பது சட்டம் தெரிந்த சமூக வலைதளவாசிகளின் கருத்து.