×

சமூக வலைதளங்களில் திருமாவளவன் மீது அவதூறு பரப்பிய பாமக பிரமுகர் கைது!

சமூக வலைதளத்தில் திருமாவளவன் மீது அவதூறு பரப்பியதாக பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி பாமகவினர் சூளகிரி காவல் நிலையம் முன்பு தீ குளிக்க முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு படுத்தி மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை திருமாவளவன் குறிப்பிட்டதை மட்டும் எடிட் செய்து
 

சமூக வலைதளத்தில் திருமாவளவன் மீது அவதூறு பரப்பியதாக பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி பாமகவினர் சூளகிரி காவல் நிலையம் முன்பு தீ குளிக்க முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு படுத்தி மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை திருமாவளவன் குறிப்பிட்டதை மட்டும் எடிட் செய்து சிலர் அந்த வீடியோவை வைரலாக்கினர். இது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக திருமாவளவன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த பாமக பிரமுகர் தியாகராஜன் என்பவர் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் பாமக பிரமுகரை சூளகிரி போலிசார் கைது செய்தனர். இதனால் பாமக பிரமுகரை விடுவிக்க வலியுறுத்தி 30க்கும் மேற்ப்பட்ட பாமகவினர் சூளகிரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தீ குளிக்க முயற்சித்தனர்.