×

பிளஸ் 1 ரிசல்ட் வெளியானது! – 96 சதவிகிதம் பேர் வெற்றி

இன்று பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 96.06 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிளஸ் 1 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் மிக தாமதமாக இன்று வெளியிட்டது. 96.04 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 97.49 சதவிகிதமும் பேரும், மாணவர்கள் 94.38 சதவிகிதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.11 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி மற்றும் மதிப்பெண்
 

இன்று பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 96.06 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பிளஸ் 1 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் மிக தாமதமாக இன்று வெளியிட்டது. 96.04 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 97.49 சதவிகிதமும் பேரும், மாணவர்கள் 94.38 சதவிகிதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.11 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது. இங்கு 98.1 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 97.9 சதவிகிதத்துடன் விருதுநகர் இரண்டாவது இடத்திலும், 97.51 சதவிகிதத்துடன் கரூர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.


2716 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் 92.71 சதவிகிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 96.95 சதவிகிதம், தனியார் பள்ளிகளில் 99.51 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்2 விடுபட்ட பாடத்துக்கான மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 63 பேர் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.