×

உதயநிதி வெளியிட்ட விநாயகர் சிலை புகைப்படம் : டிவிட்டரில் வாக்குவாதம்!

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , களிமண்ணால் செய்யப்பட்ட எருக்கம் மாலை அணிந்தபடி ஆன விநாயகர் சிலையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். திமுகவைப் பொறுத்தவரையில்
 

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.

இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , களிமண்ணால் செய்யப்பட்ட எருக்கம் மாலை அணிந்தபடி ஆன விநாயகர் சிலையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்தே கடவுள் மறுப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டே இயங்கி வந்தது. இதை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியும், ஸ்டாலினும் தொடர்ந்து பின்பற்றி வந்தனர். ஆனால் அதே சமயம் அவர்கள் வீட்டில் உள்ள பெண்கள் பக்தியுடன் சாமி கும்பிடும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

தங்கள் கொள்கைகளை தனது குடும்பத்தின் மீது திணிக்க விரும்பாதவர்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். திமுக என்பது அனைத்து மக்களுக்கான மதங்களுக்கான கட்சி என்றும் இதில் குறியீடுகள் நிறைய இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ ஓட்டுக்காக இதுபோன்று திமுக அந்தர் பல்டி அடித்து வருவதாக விமர்சித்து வருகின்றனர். மொத்தத்தில் உதயநிதி வெளியிட்டுள்ள விநாயகர் புகைப்படம் சமூக வலைதளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.