×

BREAKING NEWS: நாளை நள்ளிரவு வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலில் இருப்பினும் மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல பாஸ் பெற வேண்டும் என்ற தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, 31 ஆம் தேதி வரை வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அப்போது அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலில் இருப்பினும் மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல பாஸ் பெற வேண்டும் என்ற தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, 31 ஆம் தேதி வரை வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அப்போது அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை முழு பொது முடக்கம் முடியும் வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது எனத் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட உள்ளதையொட்டி நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு முடியும் வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என்றும் திங்கள்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் தான் பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முழு பொது முடக்க நாட்களில் ஆம்புலன்ஸ், பால், அவசர மருந்து சிகிச்சை வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.