×

சாத்தான்குள விவகாரத்தில் ஈடுபட்ட காவலர்கள் கைது.. பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்!

சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட
 

சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடித்து காவலர்களை கைது செய்யுமாறு சிபிசிஐடி போலீசார் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதன் படி, காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். காவலர்கள் கைது செய்யப்பட்டது அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், சாத்தான்குள மக்கள் காவலர்கள் கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.