×

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குக – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்பு, கல்வி டிவி போன்றவை மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளை பொறுத்தவரையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி
 

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்பு, கல்வி டிவி போன்றவை மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

கல்லூரிகளை பொறுத்தவரையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி, இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெருவதாக அறிவித்தார். இதனால் கிட்டதட்ட 23 அரியர்கள் வைத்த மாணவர்கள் கூட தேர்ச்சி பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரிடர் நெருக்கடியில் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை முதல்வர் பழனிசாமி கை கழுவியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. பருவத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களையும் கண்டுகொள்ளாமல் இப்படியொரு பாரபட்சமான முடிவினை எடுத்து அறிவித்திருக்கிறார். இதனால் பல கல்லூரிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.ஆகவே, கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.