×

புத்திசாலி அரசு என்ன செய்ய வேண்டும்? – ப.சிதம்பரம் அட்வைஸ்

சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை (Grand Western Trunk Road) கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என தமிழக நெடுஞ்சாலை துறை மாற்றி இணையத்தில் பதிவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை முன்வைத்தனர். இதனிடையே பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்துவந்தார். இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர்
 

சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை (Grand Western Trunk Road) கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என தமிழக நெடுஞ்சாலை துறை மாற்றி இணையத்தில் பதிவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை முன்வைத்தனர். இதனிடையே பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்துவந்தார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு புத்திசாலி அரசு என்ன செய்ய வேண்டும். தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட நெடுஞ்சாலைகளின் பெயர்களில் எந்த மாற்றமும் கிடையாது என்று உடனே அறிவிக்க வேண்டும். இந்தச் சர்ச்சையை இன்றிரவே முடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.