×

பாஜகவிலிருந்து விலகினால் உடனே அமலாக்கத்துறை மூலம் வழக்கு போடுகிறார்கள்- ப சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், “இந்தியாவைப் பற்றி ஒன்பது மொழிகளில் நான் எழுதி வருகிறேன். ஆனால் தமிழில் நான் எழுதிய கட்டுரைகளை வெளியிட ஊடகத்துறைக்கு தைரியம் இல்லை. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பேராபத்து வந்துள்ளது. அனைத்து ஊடகங்களும் மத்திய அரசின் பிடியில் உள்ளதால் அச்சத்தில் உள்ளது. கொரானா கால கட்டத்தில் மக்கள் பட்ட கஷ்டங்களை புகைப்படத்தில் பார்க்கும் போது, இந்தியா வளர்ந்த நாடு என்று கூறிக் கொள்ள முடியாது. விவசாயிகளுக்கு
 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், “இந்தியாவைப் பற்றி ஒன்பது மொழிகளில் நான் எழுதி வருகிறேன். ஆனால் தமிழில் நான் எழுதிய கட்டுரைகளை வெளியிட ஊடகத்துறைக்கு தைரியம் இல்லை. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பேராபத்து வந்துள்ளது. அனைத்து ஊடகங்களும் மத்திய அரசின் பிடியில் உள்ளதால் அச்சத்தில் உள்ளது.

கொரானா கால கட்டத்தில் மக்கள் பட்ட கஷ்டங்களை புகைப்படத்தில் பார்க்கும் போது, இந்தியா வளர்ந்த நாடு என்று கூறிக் கொள்ள முடியாது. விவசாயிகளுக்கு வழங்குகிறோம் என்று கூறிய 6000 ரூபாய் விவசாயிகளுக்கு இன்னும் போய் சேரவில்லை. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள்தான். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினால் உடனே அமலாக்கத் துறை மூலம் வழக்கு போட்டு, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது மத்திய அரசு” எனக் கூறினார்.