×

’’எங்களின் பாகுபலியே!’’ – எடப்பாடியைக் கொண்டாடும் மாணவர்கள்!அரசியலா? தன்னெழுச்சியா?

அரியர் மாணவர்களின் அரசனே என்று ஈரோட்டு மாணவர்கள் கொண்டாடியதுபோல , மாணவர்களின் மனிதக்கடவுளே என்று கோவை மாணவர்கள் கொண்டாடியது போலவே, மாணவர்களின் பாகுபலியே என்று திண்டுக்கல் மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி கொண்டாடப்பட்டு வருவதால், அதிமுகவினர் மகிழ்ச்சியில் இருக்க, எதிர்தரப்பினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் மாணவர்களில் செயல் அரசியலா? தன்னெழுச்சியா? என்ற விவாதமும் எழுந்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்களை, கிரிக்கெட் வீரர்களை மாணவர்கள் தூக்கிப் பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் முதல் முறையாக
 

அரியர் மாணவர்களின் அரசனே என்று ஈரோட்டு மாணவர்கள் கொண்டாடியதுபோல , மாணவர்களின் மனிதக்கடவுளே என்று கோவை மாணவர்கள் கொண்டாடியது போலவே, மாணவர்களின் பாகுபலியே என்று திண்டுக்கல் மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி கொண்டாடப்பட்டு வருவதால், அதிமுகவினர் மகிழ்ச்சியில் இருக்க, எதிர்தரப்பினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் மாணவர்களில் செயல் அரசியலா? தன்னெழுச்சியா? என்ற விவாதமும் எழுந்திருக்கிறது.

சினிமா நட்சத்திரங்களை, கிரிக்கெட் வீரர்களை மாணவர்கள் தூக்கிப் பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் முதல் முறையாக தமிழகம் முழுவதும் அரசியல்வாதி ஒருவரை புகழ்ந்துதள்ளி போஸ்டர் ஒட்டி பட்டயக் கிளப்பியிருக்கிறார்கள் மாணவர் அமைப்பினர்.

கொரோனா தாக்கம் எதிர்பார்த்த அளவிற்குக் குறையாத நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். ‘’என்றைக்கு கல்விக்கூடங்கள் திறந்து, எப்போது பாடம் நடத்தி,  எப்போது பரிட்சை எழுதி, எப்படி பாஸாகப் போகிறோம்?” என்கிற கவலை இவர்களை வாட்டி எடுத்தது.

லட்சக்கணக்கான மாணவர்களின் இந்த மனக் கவலையைப் புரிந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யாருமே எதிர்பார்க்காத அந்த இன்ப அதிர்ச்சியை அளித்தார்.

ஆமாங்க. இறுதி செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு, செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்த மாணவர்களின் மனங்களில் பால் வார்த்தது. அத்தோடு அரியர் தேர்வுக்காகக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதக் காத்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிற எடப்பாடியின் அடுத்த அறிவிப்பைக் கேட்டு அவரை உச்சந்தலையில் வைத்து கொண்டாடத் தொடங்கிவிட்டனர் மாணவர்கள்.

முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பால் 20 பேப்பர் வரை அரியர்ஸ் வைத்திருந்தவர்களும் ஆல் -பாஸ் ஆகி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றனர்.

வாராது வந்த மாமணி போல தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும் இந்த மாபெரும் ஆளுமை மிக்க தலைவருக்கு நன்றி தெரிவித்து  தமிழகம் முழுவதும்  மாணவர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் .

’’மாணவர்களின் அரசனே’’ என ஈரோட்டில் தொடங்கிய போஸ்டர் அணிவகுப்பு, கோவை உள்ளிட்ட ஊர்களிலும் தொடர்ந்தது.  லேட்டஸ்டாக திண்டுக்கல் நகர் முழுவதும் ’மாணவர்களின் பாகுபலியே’ என்கிற வாசகத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தும் ஏராளமான போஸ்டர்களைப் பார்க்க முடிகிறது. இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்களின் வாழ்த்தரங்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

, ஈரோட்டில் அரியர் மாணவர்களின் அரசனே வாழ்க வாழ்க என்று போஸ்டர் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போஸ்டரை அகற்றினர்

அதைத்தொடர்ந்து கோவையில் மாணவர்கள் சிலர், மாணவர்களின் மனிதக் கடவுளே! எங்கள் ஓட்டு உங்களுக்கே! என்ற வரிகளுடன் போஸ்டர் ஒட்டியது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது திண்டுக்கல்லில் மாணவர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் வைத்துள்ளனர். அதில் மாணவர்களின் பாகுபலியே, அரியரை வென்ற அரசனே என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாணவர்களின் இந்த செயல் அரசியல் என்று எதிர்தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், ’’இது அரசியல் அல்ல தன்னெழுச்சி’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அவர்கள் மேலும் இது குறித்து, ’’எவ்வித கட்சி பின்னணியும் இன்றி மாணவர்கள் தன்னெழுச்சியாக இந்த காரியத்தை செய்து வருகின்றனர். மேலோட்டமாக பார்க்கும்போது முதல்வரின் நடவடிக்கை சிலருக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் மாதக் கணக்கில் கல்லூரிகள் மூடப்பட்டு, எதிர்காலம் குறித்த அச்சத்தில் சிக்கியிருந்த மாணவர்களுக்கு முதல்வரின் அறிவிப்பு தாங்க முடியாத மகிழ்ச்சியை, மன நிம்மதியைத் தந்திருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாகத்தான் தங்களது உணர்வுகளை இப்படி வெளிப்படுத்தி வருகிறார்கள். லட்சோப லட்சம் மாணவர்களின் இந்த நன்றி உணர்ச்சி எதிர்வரும் தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்கிறார்கள் உறுதிபட.