×

தமிழகத்துக்கு “ஆரஞ்சு அலர்ட்” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்பதால் இரண்டு மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கோவா, , தமிழகம் உள்ளிட்ட
 

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்பதால் இரண்டு மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கோவா, , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.