×

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை
 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரித்த போது, சபாநாயகர் தனபால் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனால் அதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தார். கடந்த ஜூன் 9 ஆம் தேதி திமுக சார்பில் புதிதாக இடைக்கால மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் மீது உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து சபாநாயகர் முதல்வரிடம் கேள்விக்கேட்க, இது உட்கட்சி பிரச்னை என முதலமைச்சரும் கடிதம் வாயிலாக பதிலளித்தார்.

இந்நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் வழக்கை 4 வாரம் ஒத்திவைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள், சட்டமன்ற செயலர் உள்ளிட்டவர்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.