×

இன்று மாலை வீடு திரும்புகிறார் ஓபிஎஸ் : மருத்துவமனை நிர்வாகம் தகவல்!!

துணை முதல்வர் ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் வழக்கமான மருத்துவபரிசோதனைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்று தகவல் வெளியானாலும் கூட, துணை முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனை வருகை தர இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் MGM மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்
 

துணை முதல்வர் ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் வழக்கமான மருத்துவபரிசோதனைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்று தகவல் வெளியானாலும் கூட, துணை முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனை வருகை தர இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் MGM மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.