×

சென்னையில் 11 ஆக குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்ததாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடம் சென்னை தான். நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான். முழுபொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு இருந்த ஒரு நாள் இடைவெளியில், மக்கள் எல்லாரும் காய்கறிகளை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள மார்க்கெட்டில் குவிந்ததால் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. கொரோனாவுக்கு
 

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்ததாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடம் சென்னை தான். நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான். முழுபொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு இருந்த ஒரு நாள் இடைவெளியில், மக்கள் எல்லாரும் காய்கறிகளை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள மார்க்கெட்டில் குவிந்ததால் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது.

கொரோனாவுக்கு அஞ்சிய மக்கள் எல்லாரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர். இதனால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் வந்தாரை வாழவைக்கும் சென்னை வெறிச்சோடி காணப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதன் விளைவாக, தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.