×

10% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்- தமிழக சுகாதார துறை

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் முன்பை விட கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. தடுப்பூசி போடும் பணியும் துரிதமாக நடைபெற்றுவருகிறது.இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயாளிகளுக்கு போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட
 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் முன்பை விட கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. தடுப்பூசி போடும் பணியும் துரிதமாக நடைபெற்றுவருகிறது.இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயாளிகளுக்கு போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த தடுப்பூசி இலக்கை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.