×

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் மட்டுமே விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள உயர்நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பார் கவுன்சில் கோரிக்கை, முதன்மை அமர்வு நீதிபதிகளின் கருத்துக்கு ஏற்ப, நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை விசாரிக்க அனுமதியளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏப்ரல் 23 வரை காணொலி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் அறைகள்,
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள உயர்நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பார் கவுன்சில் கோரிக்கை, முதன்மை அமர்வு நீதிபதிகளின் கருத்துக்கு ஏற்ப, நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை விசாரிக்க அனுமதியளித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏப்ரல் 23 வரை காணொலி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் அறைகள், சங்கங்கள் மற்றும் அவற்றின் நூலகங்கள் திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.