×

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை!

ஆன்லைன் வகுப்பு களுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது. அந்த வகையில் , ஆன்லைன் வகுப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்
 

ஆன்லைன் வகுப்பு களுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது. அந்த வகையில் , ஆன்லைன் வகுப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெற்றோர் -ஆசிரியர் கழக கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு தேவை என்றும் கூறியுள்ள நீதிபதிகள் , விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.