×

கல்வி டிவியின் ஓராண்டு நிறைவு: முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற முடிவு இன்னும் எடுக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. ஒருபுறம் தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வரும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு
 

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற முடிவு இன்னும் எடுக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. ஒருபுறம் தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வரும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசால் தொடங்கப்பட்டது கல்வி தொலைக்காட்சி. ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களுக்கு இந்த டிவி மூலம் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்களிடம் கல்வி தொலைக்காட்சி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அத்துடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் கல்வி தொலைக்காட்சிக்கு நற்பெயர் கிடைத்துள்ளது.

கல்வி டிவியின் மூலம் பள்ளி பாடங்களை சுமார் 10 லட்சம் பேர் சில வாரங்களில் கண்டு பயன் அடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் கல்வி டிவியில் பாடங்கள் மட்டுமின்றி இசை ,நடனம்,கவின்கலை குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கும் வல்லுநர்கள் பதிலளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் கல்வி தொலைக்காட்சி ஆரம்பமாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். அதில், “ஓராண்டு நிறைவு செய்துள்ள கல்வி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டு . கல்வி தொலைக்காட்சி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என செய்திகள் இரட்டிப்பு மகிழ்ச்சி. கல்வி தொலைக்காட்சி பார்க்கத் தவறினால் யூ டியூப் வழியாக பார்க்க வழிவகை செய்யப்படும். கல்வி தொலைக்காட்சி சிறப்பாக செயல்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு பாராட்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.