×

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்!

தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் ஆம்னிப் பேருந்தகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நவம்பர் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலும், நவம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரையிலும் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து
 

தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் ஆம்னிப் பேருந்தகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நவம்பர் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலும், நவம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரையிலும் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து மட்டும் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்தது. இந்நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டுபிடிக்க சிறப்பு பறக்கும் படையையும் போக்குவரத்துத்துறை அமைத்துள்ளது.