×

அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமரக்கூடாது! அமைச்சர் அதிரடி உத்தரவு

பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பத்திர பதிவின் போது உயர்ந்த மேடையில் அலுவலர்கள் அமராமல் சரி சமமான இருக்கையில் அமர வேண்டும். பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி பதிவு சேவையை வழங்க வேண்டும். சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்ட நிலையிலும், அரசுக்கு செலுத்தப்படும் கட்டணங்கள்
 

பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பத்திர பதிவின் போது உயர்ந்த மேடையில் அலுவலர்கள் அமராமல் சரி சமமான இருக்கையில் அமர வேண்டும். பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி பதிவு சேவையை வழங்க வேண்டும்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்ட நிலையிலும், அரசுக்கு செலுத்தப்படும் கட்டணங்கள் யாவும் இணைய வழியாக செலுத்தப்படுவதால், சார்பதிவாளர்கள் பணத்தை கையாள வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அதிகாரிகளும் உயர் மேடைகளும் தேவையில்லை. பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதி செய்யும் வகையில் பதிவு அலுவலர்களின் இருக்கையை சம தளத்தில் அமைத்து சுற்றியுள்ள தடுப்புகளை உடனே அகற்ற வேண்டும். உயர்ந்த மேடையில் அலுவலர்கள் அமர்ந்து பதிவு பணியை மேற்கொள்வது சிரமமாக இருப்பது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.