×

வடகிழக்கு பருவமழை ஜனவரி 12 வரை நீடிக்கும் : எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகடலோரத்தில் லேசான மழையும், தென் கடலோரத்தில் மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை நகரில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை ,கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை ஏனைய கடலோர மாவட்டங்களில்
 

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகடலோரத்தில் லேசான மழையும், தென் கடலோரத்தில் மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை நகரில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை ,கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதேபோல் ஜனவரி 6ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ,கடலூர் ,விழுப்புரம், தேனி ,நீலகிரி ,கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் , வடகிழக்கு பருவமழை ஜனவரி 12 வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.