×

“வடகிழக்கு பருவமழை தாமதமாகிறது” : வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவமழை துவங்குவது தாமதமாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் இறுதி வரை மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும். மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மழை பெய்து
 

வடகிழக்கு பருவமழை துவங்குவது தாமதமாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் இறுதி வரை மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும். மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.