×

“பாஜகவின் நெருக்கடி; திமுகவுக்கு ரஜினி ஆதரவு” : முத்தரசன் சொல்லும் ரகசியம்!

யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், பாஜகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது.இதற்கான தேர்தல் பரப்புரையை அரசியல் கட்சியினர் தொடங்கியுள்ளனர். இதுவொருபுறமிருக்க ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் உடல்நிலை காரணமாக தனது அறிவிப்பிலிருந்து பின் வாங்கினார். சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ரஜினி பின்வாங்கியதால், பாஜகவுக்கு ஆதரவு தரக்கோரி ரஜினியிடம் கேட்கப்படும் என்பது அரசியல்
 

யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், பாஜகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது.இதற்கான தேர்தல் பரப்புரையை அரசியல் கட்சியினர் தொடங்கியுள்ளனர். இதுவொருபுறமிருக்க ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் உடல்நிலை காரணமாக தனது அறிவிப்பிலிருந்து பின் வாங்கினார். சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ரஜினி பின்வாங்கியதால், பாஜகவுக்கு ஆதரவு தரக்கோரி ரஜினியிடம் கேட்கப்படும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

இந்நிலையில் தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில், “ரஜினி நல்ல ஆரோக்யத்துடன் இருந்து நல்ல திரைப்படங்களை தரட்டும்; வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், பாஜகவை மக்கள் தோற்கடிப்பார்கள். ரஜினியிடம் யார் வேண்டுமானாலும் ஆதரவு கேட்கலாம். திமுக கூட்டணி கூட ரஜினி ஆதரவு தரலாம். பாஜக நடிகர்களை அரசியலுக்கு வர நிர்பந்திக்கிறது. இல்லை என்றால் அவர்களுக்கு நெருக்கடி தருகிறது” என்றார்.