×

நிவர் புயல் பாதிப்பு : தமிழகம் வருகிறது மத்திய குழு!

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்தது . இதனால் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல் மூவர் படுகாயம் அடைந்தனர். குடிசை வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவை பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் நிவர் புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் புதுச்சேரி அருகே இப்புயல் கரையை கடந்ததால் அங்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடி இழப்பு
 

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்தது . இதனால் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல் மூவர் படுகாயம் அடைந்தனர். குடிசை வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவை பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் நிவர் புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் புதுச்சேரி அருகே இப்புயல் கரையை கடந்ததால் அங்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நவம்பர் 30ம் தேதி தமிழகம் வருகிறது. இதை தொடர்ந்து டிசம்பர் 1-ஆம் தேதி புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளது.

முன்னதாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் ‘ புரெவி ‘ என பெயர் வைக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.