×

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரி

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நாடாளுமன்ற அமைப்பு மற்றம் மக்கள் எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி, முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும்
 

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த திங்கட்கிழமையன்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நாடாளுமன்ற அமைப்பு மற்றம் மக்கள் எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி, முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர் என்று நகைச்சுவையாக பேசியது வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

அரசியல்வாதி (மாதிரி)

அந்த வீடியோவில் நிதின்கட்கரி, எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக ஆனதால் மகிழ்ச்சியாக இல்லை, அமைச்சர்கள் நல்ல துறைகள் கிடைக்காததால் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர். நல்ல துறைகள் உள்ளவர்கள் முதல்வராக முடியாததால் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தனர் மற்றும் முதல்வராக இருப்பவர் இது எவ்வளவு காலம் தொடரும் என்று கவலைப்படுகின்றனர்.

பா.ஜ.க.

அரசியலின் உண்மையான நோக்கம் வரிசையில் நிற்கும் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவதாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போதெல்லாம் இது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வழியாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் மாற்றப்பட்ட சூழ்நிலையில் நிதின் கட்கரி இந்த கருத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.