×

குறைவான சம்பளம் வழங்கியதால் ஆத்திரம்… சமையல் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற உதவியாளர்!

ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் சமையல் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற உதவியாளர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம கமுதி அடுத்துள்ள நத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். சமையல் தொழிலாளி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவர், உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று திருமண நிகழ்ச்சிக்கு சமையல் வேலைக்கு சென்று திரும்பிய இருவரும், நத்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமர்ந்து சம்பள தொகையை பிரித்துக் கொண்டுள்ளனர். அப்போது, முருகன் குறைவான சம்பள
 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் சமையல் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம கமுதி அடுத்துள்ள நத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். சமையல் தொழிலாளி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவர், உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று திருமண நிகழ்ச்சிக்கு சமையல் வேலைக்கு சென்று திரும்பிய இருவரும், நத்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமர்ந்து சம்பள தொகையை பிரித்துக் கொண்டுள்ளனர். அப்போது, முருகன் குறைவான சம்பள தொகையை, குமரனுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமரன் அருகில் கிடந்த கல்லை எடுத்து முருகன் மீது தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் முருகனை மீட்டு கமுதி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமம் காவல் நிலைய போலீசார், முருகனின் உடலை முட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முருகன் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்தனர்.