×

நெல்லையில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்களும் அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது. குறிப்பாக, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. அதுமட்டுமில்லாமல் இபாஸ் முறையில் அளித்த தளர்வுகளும் இதற்கு ஒரு காரணமாகும். இதனாலேயே அரசு இபாஸ் முறையை ரத்து செய்ய மறுப்பு தெரிவிக்கிறது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு இன்னும் ஒரு சில நாட்களில்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்களும் அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது. குறிப்பாக, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. அதுமட்டுமில்லாமல் இபாஸ் முறையில் அளித்த தளர்வுகளும் இதற்கு ஒரு காரணமாகும். இதனாலேயே அரசு இபாஸ் முறையை ரத்து செய்ய மறுப்பு தெரிவிக்கிறது.

தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவிருக்கிறார். அன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் நாள்தோறும் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 9,013 ஆக அதிகரித்துள்ளது.