×

வளம் பெருக்கும் அகல் விளக்கின் நவக்கிரக தத்துவம்!

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவுகின்றன. பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும் என்பதையே தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவமாகும். பொதுவாகவே, கோயில்களிலும், வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம். அகல் விளக்கு தீபம் ஏற்றுவதில் உள்ள நவகிரக தத்துவம் உங்களுக்கு தெரியமா? அகல் என்பதற்கு ‘விரிவடைதல்’ என்ற அர்த்தம் உண்டு. நம் வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து
 

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவுகின்றன. பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும் என்பதையே தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவமாகும்.

பொதுவாகவே, கோயில்களிலும், வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம். அகல் விளக்கு தீபம் ஏற்றுவதில் உள்ள நவகிரக தத்துவம் உங்களுக்கு தெரியமா?

அகல் என்பதற்கு ‘விரிவடைதல்’ என்ற அர்த்தம் உண்டு. நம் வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு ஆதிகாலம் முதல் நம் முன்னோர்களால் செய்யப்படுகிறது.

மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு என்பது நம் கண் முன்னால் காட்சியளிக்கும் சூரியப்பகவானை குறிக்கும். அதில், ஊற்றப்படும் நெய் அல்லது எண்ணெய் திரவமானது சந்திரபகவானைக் குறிக்கும். தீபம் எரியக்கூடிய திரியில் புதன் பகவானும், தீபத்தின் ஜூவாலையில் செவ்வாய் பகவானும், ஜூவாலையின் நிழல் கீழே விழும் பகுதியில் சாயா கிரகமான ராகுவும், ஒளி வெளிச்சம் பரவுகிறதில்(ஞானம் ) கேதுவும், ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் குருபகவானையும், ஜூவாலையின் அடியில் அணைந்தவுடன்

இருக்கும் கரியில் சனிபகவானும், திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால், அனைத்தும் சுகம் என அர்த்தமாகும். ஆசைகள் நம்மை அழிக்கிறது. மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது. இதுவே அகல் விளக்கு ஏற்றுவத்தின் நவகிரஹ தத்துவமாகும். அகல் விளக்கு தீபம் ஏற்றி, நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபட்டு, எல்லா நலன்களை பெறுவோம்.

-வித்யா ராஜா